Profile

Thursday, 24 October 2013

MENAKA SOCKALINGAM Feature Artiste - " Mekala " - The Dance with a Magic Bowl


Arusri Art Theatre proudly presenting Menaka Sockalaingam featuring as a Mani Mekala the heroin of the production " Mekala " - The Dance with the magic bowl.





About Menaka Sockalaingam 

Menaka Sockalingam haling from Kampala SriLanka, a girl with an aspiration to  become a classical dancer has come from srilanka to India to study classical dance in "kalai kaviri college of fine arts", with the motivation and support of her dear parents Mr.Sockalingam and Mrs.Kalyani.

She has finished B.F.A and M.F.A Degree in Bharathanatiyam in Kalai Kaviri of fine arts in 2013

She has staged Mohiniyattam, Kuchipudi and Bharathanatiyam Arangetram in kalai kaviri college of fine arts. she has learned Kuchipudi under guidance of  Mr. Mohanapriyan Thavarajah Mohiniyattan Under Kumari Menan Bharthanatyam under Mr.Mathan kumar  . apart from her interest in dance, she is also interested in creative writing like poetry,story writing, skit and in elocution. For which she has won many prizes on elite stages in Tamil nadu and won lourels in all island level in debate and drama competition in Srilanka,she has also showed her tallents by writting short film stories .

her most memorable Awards won through her creative writing & dance is the "super snehidhi" awarded by "kumudham" in 2010 and " Yuva Shri Kala Bharathi " award.

She has performed dance programmes on many stages and most memorable one is the participation in cultural festival programme conducted by "Indian high commission" she has also performed Bharathanatiyam programmes in many temple festival. from recently she is being working with Arusri Art Theatre.



catch her performances on 30th and 31st at Bishops College Colombo- 03


 

Friday, 11 October 2013

" Mekala " The Dancer with a magic bowl


Yet another extravagant production from the magical bowl Arusri Arts- “Mekala”

Arusri Arts Theatre needs no introduction in the current era as for the exceptional reputation they have earned of being innovative and creative in its numerous endeavors both locally and Internationally.  Under the direction of Kalasuri Dr Arunthathy.Sri Ranganathan, the mother and the back bone of the whole theatre, the newest creation is Mekala. It is as a continuation of the epic Silapathikaram portrays with religious undertones, the story of the daughter of Kovalan and Madavi, who though born as a courtesan, dared to lead a life of chastity and charity and ultimately converts to a Buddhist nun. The ballet opens with a flashback from Silapathikaram wherein Madavi recollects her life with Mekala's father Kovalan. Having set the context the ballet on Manimekalai’s life  story opens with episodes mostly dwelling on aspects of the performing arts.

The title Mekala  ,an abbreviation for Manimekalai, written by the Tamil Buddhist poet  Seethalai Chaathanaar presents beautiful episodes of one of the five great epics of Tamil Literature  portraying the social, religious ,cultural and academic  life of  people  during the early era of Tamil literary growth like the Silapathikaram, Civaka Cintamani, Valayapathi and Kundalakesi.    

The story of Manimekalai   Is a sequel to Silapathikaram written by the illustrious Tamil poet Ilango Adigal of the 2nd century AD. Silapathikaram revolves around virtuous Kannagi, who having lost her husband Kovalan to a miscarriage of justice at the court of the Pandya King , wreaks her revenge on his kingdom.  Kannagi the pathini Goddess is worshipped in India and Srilanka as pathini Deiyo. The introduction of Pathini cult by King Gajabahu 11 in Srilanka is not a myth. 



In contrast Manimekalai tells with religious undertones the story of the daughter of Kovalan and Madavi, who though born a courtesan ,dared to lead a life of chastity and charity..As a continuation of Silapathikaram this epic describes how Mekala the beautiful daughter of Kovalan and Madavi ( the versatile court dancer ) converts to Buddhism. 

Manimekalai is a poem in 30 cantos.The epic  gives much information  on the history of Tamil Nadu , Buddhism ,and its place during that period ,contemporary arts and culture ,and the customs of the times. The exposition of the Buddhist doctrine in the poem deals elegantly with the four Noble truths , dependent origination,  mind and Buddhist practises like virtue and non-violence. Mekala later becomes a dedicated Buddhist nun. 


The story is written around the harbour town, of Kaveri pattinam ,the modern town Puhar in Tamil 
Nadu, and Nainatheevu  ( Naga Deepa ) a small sandy Island of the Jaffna peninsula  in Sri Lanka. 
The epic is rich and complex ,dense and bursting with life ,intellectual and cultural energy. In this production, the ballet opens with a flashback from Silapathikaram wherein Madavi recollects her life with Mekalas father  Kovalan . Having set the context the ballet on  Manimekalai s life  story opens in episodes dwelling mostly on aspects of the performing arts. 


Madavi  has performed eleven variety of dances in her Arangetram which is  described in detail by Ilango Adihal  in Silapathikaram.  In todays production the producer has chosen a variety of dance styles  to justify the exceptional talent of Madavi to give a touch of variation and glamour to the production. 

Choreography has been done primarily in Bharathanatyam style  merged with shades of  Kathakali, Kathak,  Mohini, Kuchipudi, Kalari, Contemporary, Folk, and Sri Lankan  Kandyan dance forms, merging with Carnatic and Hindustani music. 


Arusri Art Theatre over the years has been able to staple the prints of art in the hearts of both local and international audience. Dance dramas produced by the theatre such as ‘Ramayana’and ‘Sakuntala’ are still appreciated widely for the perfection and quality of dance. The theatre has not only spread the message of love within the island, but has also been fortunate to be invited to perform at several prestigious festivals, namely Oslo Mela in Norway, Ferde folk music and Dance festival, Shanghai Music and Dance festival, Voice of Asia festival in Kazhakstan, New opera House opening in Norway, International Ramayana festival in India and Indonesia, Anupavam, Narthana Mathuram, Soundarya Lahari, Glympses of Angkor  Wat  in Singapore, a collaboration with Apsaras Arts Singapore and numerous other  multi cultural concerts on Ethnic Harmony – UNITY IN DIVERSITY


The theatre follows only the pure essence of love for art, no restriction of religion and cast are paid heed within the walls of the temple. As for this reason of diverse perspective and unity of ethic harmony, a unique style of performance has been adopted in the theatre which can not be copied else where. The sole foundation of such a unique blend is bedded by no other than Kalasuri Dr Arunthathy.Sri Ranganathan.


Kalasuri Dr Arunthathy Sri Ranganathan, a senior broadcaster, a reputed musician, composer, choreographer, media consultant and lecturer par excellence, is well known for her dynamic innovations in music compositions ,especially for dance and multi cultural concerts on ethnic harmony. She brought with her to the stage classical traditions of music and dance that gave relevance and meaning to the art form in its current age. Her choreography in music and dance is widely used by dancers. She is also the Art Director for many local and International art festivals and has won a number of Awards and titles, both National and International for her contributions to art and culture. She is a member in several prestigious boards, and artistic consultant for the music corporation project between Norway and Sri Lanka. She is a pioneer in bringing together to a common platform, the cream of the Sri Lankan artists, handpicked from diverse ethnicities. She has made a lasting contribution to the country's efforts towards national reconciliation through a refreshing medium -the performing Arts.

 Let us all hold hands together and become a contribution towards the walk of unity. Enlighten our souls with “MEKALA” - A unique journey through divine music and dance.




Wednesday, 28 August 2013

ஆபரணங்கள் வழி மகிமை உணர்த்தும் பரதநாட்டியம்.

ஆபரணங்கள் வழி மகிமை உணர்த்தும் பரதநாட்டியம்.

                                                                                                                     மோகனப்ரியன் தவராஜா

மனித பிறவி ஒரு மகத்தான பிறவியே இப்ரபஞ்சத்திலே படைக்கப்பட்டவை யாவும் மானுடனுக்கே என்ற கருத்தும் அமோதிக்கத்தக்கதே, ஆக மானுட வாழ்வினில் அவன் அனுபவிக்கும் ஒவ்வொரு பொருளும் பயன் தரதக்கதாக  எதோ ஒரு குணாதிசயத்தையும் சிறப்பம்சத்தையும் கொண்டிருக்கும்

இறைவன் படைப்பில் ஒவ்வொன்றும் அழகாக மிளிர்ந்தாலும் அதற்கென அமைந்த ஆபரணங்களால் அப்படைப்புகள் காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்றன வானிற்கு நிலவு மங்கைக்கு மலர் தமிழுக்கு காவியம் என் ஒவ்வொன்றும் தனக்கென்று ஓர் அழகை அணிகலனாய் தரித்துள்ளது அந்த வகையில் ஆடல் நிகழ்த்துபவரின் நாட்டியம் சிறக்க திறமை, இசை, ஆடை, அரங்கு என் எத்தனை விடயம் இருந்தாலும் பார்வையாளரின் பார்வைக்கு விருந்தாய் அமைவது நடனமும் அந்நாட்ய மணிக்கு அழகு சேர்க்கும் அணிகலன்களும் என்று கூறினால் அது மிகையாகாதவோன்றே. நடனத்துக்கு வெறும் அழகு சேர்ப்பதற்காக மட்டும் இவை அமைக்கப்பெறவில்லை மாறாக மகத்தான உட்கருத்துகளையும் உன்னதமான பயன்களையும் கொண்டுள்ளது என்று யோகா சாஸ்திரத்தில் கூறும் மனிதனின் உடலில் அமைந்துள்ள சக்கரங்கள் வழியாக நிருபித்துள்ளனர் எமது முற்சென்ற ஞானிகள். நடனத்திற்கு முக்கிய ஆபரணங்களாக ஒட்டியாணம்,பதக்கமாலை, அட்டிகை, தோடு மாட்டல் ஜிமிக்கி, நத்து மூக்குத்தி புல்லாக்கு நெற்றிச்சுட்டி அல்லது நெற்றிப்பட்டம், சூரியன் சந்திரன் ராக்கொடி என்பவற்றை குறிப்பிடலாம்.

ஒட்டியாணம்


ஒட்டியாணம் என்ற சொல் இடுப்பு பகுதியி குறிக்கின்றது ஒட்டியாணம் கட்டப்படும் பகுதியாக விளங்குவது மணிப்பூரக சக்கரம் ஆகும் அனைத்து சுவாசங்களுக்கும் தொப்பூழ் கோடியே மூலப்புள்ளியாக திகழ்கின்றது இடுப்பை இழுத்து கட்டும் போது குண்டலினி சக்தியானது எழுப்பப்படுவதாக யோகா சாஸ்திரம் கூறுன்கின்றது. ஒட்டியாணம் அணியக்கூடிய இடமானது மணிப்பூரக சக்கரம் இருக்குமிடம் ஆயிரத்து எட்டு நரம்பு நாடி சூழ் நாடிக்கெல்லாம் வேராக அமைந்துள்ளது. இந்த அணிகலனை இறுக்கமாக கட்டுவதானால் முக்கிய நரம்புகள் அழுத்தம் அடைந்த நிலையில் உடலில் இஅரத்த ஓட்டத்தை சீரமைத்து புத்துணர்ச்சியையும் உறுதி தன்மையையும் அளிக்கின்றது.ஒரு அடைவினை அரைமண்டியில் அமர்ந்து ஆடும் போது காலசைவு, முன்பின் பக்க அசைவுகள் அனைத்திற்க்கும் பிடிமானத்தையும் முதுகெலும்பிற்கும் உடலுக்கும் தளர்வு நிலையை கொடுக்காமல் உறுதி தருவதாக ஒட்டியாணம் விளங்குகின்றது. ஒட்டியானத்தின் நடுப்பகுதியானது மற்றைய பாகங்களை விட பெரிதாக அமைக்கப்பட்டிருக்கும் அது மணிப்பூரக சக்கரத்தினை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது  

முத்துமாலை பதக்கம்

முத்துமாலை பதக்கமானது இதயப்பகுதியை குறிக்கக்கூடிய நான்காவது சக்கரமாகிய அநாகத சக்கரத்தின் குறியீடாக அமைகின்றது நடனம் ஆடும் பொது இதயத்துடிப்பானது வேகமாக செயல்பட தொடங்குகின்றது பதக்கம் அணிவதன் மூலம் இதயத்துடிபினை சீரமைக்க உதவும் என அணியப்படுவதாக கருதுகின்றனர் உதாரணமாக நாம் வேகமாக நடந்தாலோ அல்லது ஓடினாலோ இதயத்துடிப்பின் வேகமானது அதிகரிக்கின்றது அப்பொழுது நன் கைகளை தானாகவே இதயப்பகுதியில் வைப்பதன் மூலம் எம்மை இளைப்பாற்றுவதாகவும் இதயத்துடிப்பை சமநினைப்படுத்துவது போன்றும் உணர்வது ஓர் வகையான நம்பிக்கையே என்று கூறலாம் இந்த பதக்கத்தில் கிளிகள் பொறிக்கப்பட்டிருக்கும்



நெற்றிச்சுட்டி நெற்றிப்பட்டம்

புருவ மத்திய பகுதியை குறிக்ககூடிய சக்கரமாக  ஆக்ஞேய  சக்கரம் விளங்குகின்றது. போட்டு வைக்கும் இடமானது நரம்புகள் இணையக்கூடிய இடமாகும். இங்கே காந்த சக்தி அலைகள் எழுகின்றன. தீயசக்திகளின் தாக்கங்கள் இல்லாமலிருப்பதற்கு இத்திலகமானது இடப்படுகின்றது என்றும் ஒரு நம்பிக்கை உண்டு. நெற்றிசுட்டியின் வட்டப்பகுதியானது   ஆக்ஞேய  சக்கரத்தை குறிக்கக்கூடியதாகவும் அவ்வட்டப்பகுதியிலிருந்து சீமந்த ரேகை வழியாக  அமைந்திருக்கும் பாகமானது ஆக்ஞேய சக்கரத்திலிருந்து சகஸ்ராரம் வரை செல்லும் மையிற் இழை போன்ற பிரம்மநாடியானது பிரம்மரந்திரத்தை குறிக்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது நெற்றியிலிருந்து காதுவரை செல்லும் பாகங்கள் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும், அதில் சதுர அமைப்பில் நான்கு முத்துக்களோடு அமைக்கப்பட்டிருக்கும் பகுதியானது இருபக்கங்களும் நரம்புகளிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய செயற்பாட்டை செய்வதனால் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இயங்குகின்றன. உதாரணமாக நாம்  கோவிலுக்கு சென்று விநாயகரை  வணங்கி தோப்புக்கரணம் இட்டு நெற்றியின் இருபக்கங்களிலும் கொட்டிக்கொள்கின்றோம் அதனால் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று  அன்றைய நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் செயல் படுவதற்கான ஆற்றலை  பெறுகிறோம் என்பதனை சமயம் வாயிலாக ஆராய்ந்துள்ளது விஞ்ஞானம்.


சூரியன் சந்திரன்


முதுகுத்தண்டின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொன்றாக இரண்டு நரம்போட்டங்கள் இருக்கின்றன. இடது பக்கத்தில் உள்ள நரம்போட்டங்களை இடாநாடி எனவும், வலது பக்கத்தில் உள்ள நரம்போட்டங்களை பிங்கல நாடி எனவும் அறியப்படுகின்றது சிலர் இவற்றை இடது,வலது, அனுசரணை தசை நார்கள் என்றும்  எடுத்துக்கொள்கின்றனர் ஆனால் இவை பிராணனை எடுத்துச்செல்லும் புரிந்து கொள்ளமுடியாத குழாய்கள் ஆகும் சந்திரன் இடா நாடியையும்  சூரியன் பிங்கல நாடியையும் குறிக்கின்றது. இப்பிராண செயற்பாடு மூக்கின் துளைகள் வழியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது மனிதன் உலக காரியங்களில் ஈடுபடுகின்றான் ஆக.அவன் உடலில் குளுமை மற்றும் வெப்பம் போன்றன சமநிலையாக பேணப்படுவதனை சுட்டிக்காட்டும் விதமாக இந்த சூரியன்,சந்திரனானது அணியப்படுகினது

அட்டிகை 


 மனித உடலில் மிக முக்கியமான பாகமாக விளங்குவது கழுத்தாகும் நம் உடலின் மற்ற உறுப்புகளிலிருந்து மூளைப்பகுதிக்கு எடுத்துச்செல்லக்கூடிய நரம்புகளுக்கெல்லாம் கழுத்துபகுதியானது ஒரு பாலமாக அமைகின்றது கழுத்தில் அட்டிகை அணிவதனால் நரம்புகளுக்கு நல்ல ஊக்கத்தை தரக்கொடியதாக அமைகின்றது அட்டிகையின் நடுவில் உள்ள வட்டப்பகுதியானது ஐந்தாவது சக்கரமான விசுத்தி சக்கரத்தை குறிக்கக்கூடியதாக அமைந்துள்ளது






நத்து, மூக்குத்தி, புல்லாக்கு

இடா நாடியும் பிங்கல நாடியும் விளம்பின நாடியில் சேர்க்கப்பட்டனவாக மூக்கின் நுனிவரை செல்கின்றன. மூக்கு துளைகள் வழியாக சுவாசத்தை எடுத்துச்செல்கிறது. நடனம் ஆடும் போது சுவாசமானது படிப்படியாக வேகமாக செயற்பட ஆரம்பிக்கின்றது இதனால் மூக்கின் அழுத்த மையப்பகுதிகளில் இதை அணிவதனால் சீரான சுவாசத்தை சீரமைக்க இவை உதவுகின்றன. அக்காலங்களில் தெய்வ கோயில்களில் ஆண் குழந்தையாயினும் பெண் குழந்தையாயினும் காத்து குத்தும் வழக்கம் விழாவாக நடைபெற்று வந்தது உடலில் துளைகள் இட்டுக்கொள்வது என்பது எல்லாம் வல்லவரான இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்கிறேன் என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்குகள் நடத்தப்படுகின்றன அக்காலத்தில் தேவதாசிகள் இறைவனை போற்றி நடனம் ஆடும்பொழுது நத்து, மூக்குத்தி, புல்லாக்கு போன்ற அணிகலன்களை அணிந்து ஆடியதால் நடனத்தின் வாயிலாக தங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதனை அறியக்கூடியதாக உள்ளது. இதை மையமாக கொண்டு இந்த அணிகலன்கள் அணியப்பட்டிருக்கலாம் எனவும் மேலும் உடலில் துளைகள் இட்டுக்கொல்வதனால் உடலிலுள்ள நச்சுத்தன்மை வெளியேற்றப்படுகிறது என்றும் பல முன்னோர்கள் கூறியுள்ளதன் வாயிலாக அறியப்படுகின்றது.


தோடு, மாட்டல், ஜிமிக்கி


ஜிமிக்கியினை தாங்கும் விதமாக மாட்டல் அமைக்கப்பட்டிருக்கிறது ஜிமிக்கி அணியும் பகுதியானது அழுத்த மையப்பகுதியாக அமைகின்றது ஆடும் போது ப்ரமரி போன்ற வேகமான அசைவுகள் செய்யும் போது செவிப்பறையில் காக்கிலியா எனும் திரவத்தின் நிலைப்பாட்டை சமப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது காக்கிலியா நிலை குலையும் வேளையில் மயக்கம் உண்டாகும். மேலும் அக்காலத்தில் மாட்டல் அணிவது  என்பது செவிக்கு ஒரு வடிகட்டியை போன்று அமைந்துள்ளதாம். ஏனெனில் ஒரு சில விடயங்கள் கேட்கப்பட வேண்டுமென்பதும் சிலவற்றை கேட்க தவிர்க்க வேண்டும் என்ற கருத்தான நம்பிக்கையை கையாண்டுள்ளதாக கூறப்படுகின்றது.











ராக்கொடி

தலையின் மேல்பகுதியில் கொண்டை இட்டு ராக்கொடி வைத்து பூவானது சுற்றப்படுகின்றது. இது ஏழாவது சக்கரமான சகஸ்ராரத்தை( ஆயிரம் இதழ் தாமரை ) குறிக்கின்றது. ராக்கொடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னப்பறவை சின்னமானது ஞானத்தின் அடையாளமாக திகழ்கின்றது நடனம் மூலம் ஞானத்தின் வழியாக இறைவனை அடைவதை குறிக்கின்றது.






ஜடைப்பின்னல்



கூந்தலை பின்னி ஜடையிடுவதை பார்த்தால் ஒரு நாகம் படம் எடுத்து நிற்பது போன்றிருக்கும். இது எதை குறிக்கின்றது என்றால் குண்டலினி சக்தியை குறிக்கின்றது. இதில் காணப்படும் மூன்று பின்னல்கள் இடா நாடி பிங்கல நாடி, சுழுமுனை நாடியை குறிக்கின்றது. இந்த பின்னல் கீழிருந்து அதாவது குஞ்சத்திலிருந்து பார்த்தோமானால் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியானது எழுப்பபடுவதாகவும், அது நாடிகள் வழியாக ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து  சென்று சகஸ்ராரம் அடைவதை குறிக்கும் விதமாக ஜடை இடப்படுகின்றது. இந்த ஜடையில் அணியப்படும் அணிகலன்கள் மற்றும் குஞ்சம் இவை அனைத்தும் உடலிலுள்ள ஏழு சக்கர மையங்களை குறிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

* ஒட்டியாணம்           -        மணிப்பூரகம் 

* பதக்கமாலை           -       அனாகதம்
* அட்டிகை                  -       விசுக்தி


* நெற்றிப்பட்டம்        -       ஆக்ஞேயம்

* சூரியன், சந்திரன்     -       பிங்கல, இடா நாடி

* ராக்கொடி                 -        சகஸ்ராரம்

* ஜடை பின்னல்        -        குண்டலினி சக்தியை குறிக்கின்றது

பரதநாட்டியம் கற்றுக்கொல்வதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல நன்மைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது  பல காலத்திற்கு முன்சென்ற எம் முன்னோர்கள் கூறியதாகும் . அவ்வுண்மைகளை யோக சாஸ்திரமும்  மற்றும் விஞ்சான ரீதியாகவும் ஆய்வு செய்த பல அறிஞசர்களும் இன்றைய நாட்டிய சமூகமும் எம்முன்னோகள் வகுத்த அறிவையும் அதன் உண்மையின் வழி வந்த  பயனையும்  எண்ணி இன்றும் வியந்து நிற்கின்றனர். ஆக உன்னத கலையாக போற்றப்படும் எமது நாட்டியக்கலை மட்டுமல்ல அதற்கு  அழகு சேர்க்கும் ஆபரணங்கள் கூட மனிதனது ஆத்மாவையும் ஆத்மாவினுள் பிறப்பிக்கப்படும்  சக்தியையும் சீராக பேணுவதுடன் கலையாலும் ஞானத்தை அடையமுடியும் என்ற உறுதியான நம்பிக்கையையும் எமக்களிக்கின்றது என்று கூறினால் அது என்றுமே மிகையாகாதவோன்றாகும்.





The speciality of Bharathanatyam with the use of accessories




Every object and discovery made or found on Earth has various properties and uses and each object is created in such a way that it has its own uniqueness and purpose towards the benefit of mankind.
All of God’s creations, though beautiful by themselves, are further beautified by the other creations that co-exist and accessorize them, continuing to be adored by people across place and time. The dark starry skies jewelled with a bright shining moon, a maiden adorned with a flower are just a handful of examples of how each creation has its own accessory to enhance its beauty. Likewise, in a dance performance the dancer’s dancing skills and the accessories which adorn her/him serve as a treat to the audience’s eyes. However, these accessories are not just worn for the purpose of enhancing one’s beauty and for attracting the audience’s attention. Early scholars have proved that these accessories have several properties closely linked to the foundational theories and the essence of yoga, which provide specific uses to the dancer.

Muthumaalai pathakkam (Long pearl chain); Attigai (Choker); Thodu, Maatal, Jimikki (Earrings); Nathu, Mookuthi, Pullaku (Nose studs & rings); Netrichutti (Headset); Suriyan Chandran (Headset in the shape of the Sun and the moon) & Raakodi (Accessory for the Plait) are important accessories of a Bharathanatyam performance.


Ottiyanam (Waist belt)


The Ottiyanam is worn around the waist, where the Manipura Chakra sits. The navel, being a central convergence point of the body where over 1008 nerves converge is considered as a very important part of the body from which energy radiates upwards and downwards; throughout the entire body system. Yoga texts describe that Kundalini Shakthi is activated when the Ottiyanam is tied onto the waist tightly. With a tight grip onto the waist, this waist belt applies pressure on some of the vital nerves, enabling the quick and smooth flow of blood, which in turn energizes the body. By having a firm hold, the Ottiyanam prevents the backbone and the other body parts from exhaustion. Since this accessory represents the Manipura Chakra, the centre piece of the Ottiyanam is designed to be bigger than its other sections.


Muthumaalai pathakkam (Long pearl chain)


The long pearl chain represents the fourth chakra, the Anahata Chakra, which refers to the heart.  Generally when involved in physical exercise, our heartbeat increases. Involuntarily, we place our hands at the centre of our chest, with a belief that the action will help to balance out our fast heart rate. Therefore, the pearl chain’s locket is believed to function as a heart rate regulator, helping to regulate a dancer’s heartbeat when he or she dances. Additionally, the locket is imprinted with a design of two parrots facing each other. In Hindu mythology, the parrot is Lord Manmatha’s mode of transport. Lord Manmatha, being the God of Love, represents all the different emotional states associated with the mood of Love. Hence, the Pathakkam (Locket) contains the design of parrots to signify that the heart serves as a root for feelings such as Love.
 
Nettrichutti/Netripattam (Headset)


The Ajna Chakra is the Chakra that is located between the eyebrows, symbolising the spiritual third eye. It is not only the place where a Pottu/Bindi is placed but it is also the point where several nerves connect and strong attractive forces prevail. It is widely believed that the Pottu prevents one from falling into the influence of evil forces. The circular portion of the Nettrichutti represents the Ajna Chakra. The short section of the Nettrichutti which is placed above the head, represents the connection between the Ajna Chakra and the Sahasrara Chakra. The 2 sides stretching out from either side of the Nettrichutti’s centre are decorated with tiny pearls. The final section of each side contains 4 pearls in the shape of a square and they are constructed in such a way to place pressure on the nerves beneath the temples of our head. Hence, the nerves are energised keeping the dancer from feeling lethargic.  


Suriyan, Chandran (Head pieces in the shape of the Sun and the Moon)


On either side of our spinal cord, there are two sets of channels/nerves that connect the brain to the hip section. The group of channels found on the left side of the spine is known as ‘Idanaadi’ while the group of channels on the right side is known as ‘Pingalanaadi’. The Chandran (moon) represents Idanaadi, while the Suriyan (Sun) represents the ‘Pingalanaadi’. The Sun is a source of heat and the moon is symbolic of coldness. Therefore, the Suriyan Chandran emphasise the importance of a balance between both heat and cold in a human body.


Attigai (Choker)


The neck, being a connector of nerves from various parts of the body to the brain is evidently a very important part of the human body. Wearing the Choker enables the nerves beneath the neck to be ever energised. The centre piece of the choker, which is circular in shape, also represents the 5th Chakra, the Vishuddhi Chakra.


Nathu, Mookuthi, Pullaku


When dancing, the breathing rate naturally increases.  The Nathu, Mookuthi and Pullaku are worn on certain parts of the nose to help regulate the breathing rate of a dancer while dancing. In ancient times, ear-piercing ceremonies for male and female children were grandly celebrated at temples which had a special meaning. People considered the practice of piercing body parts like the ears and the nose as surrendering oneself to God. Hence, when dancing, Devadasis wore Nathu, Mookuthi and Pullaku which symbolised that they surrendered themselves to God. Also, our early ancestors have mentioned that holes created on bodies via piercings help in the removal of toxins from the body.


Thodu, Maatal, Jimikki


The thodu is placed on the earlobe where the ear is pierced. The Thodu, together with the Jimikki and Maatal helps in protecting the Cochlea section of the ear especially when the dancer is involved in extremely fast movements. When the Cochlea is affected, giddiness tends to set in. Therefore, the Mattal which extends upwards from the Thodu functions as a protecting guard, helping to regulate the wavelengths of the sound entering the ears.


Raakodi
The Raakodi is placed on the hair bun which is placed on the top part of the head. It is shaped like a lotus with a thousand petals, therefore representing the 7th Chakra, the Sahasrara Chakra. The Raakodi embedded with stones, also forms a swan. The swan which symbolises knowledge (enlightenment) thus signifies that the dancer aims to reach God through enlightenment.


Jadaipinnal


When hair is braided into a plait, it resembles the shape of 2 serpents overlapping and twisting over one another. This is symbolic of the Kundalini Shakthi. The hair, which is split into 3 parts before it is braided, represents the Idanaadi, Pingalanaadi and the Sushumnanaadi. From the bottom view, the plait would look like the Kundalini Shakthi is being activated from the base, rising upwards through the various Naadis (channels), passing through the other Chakras and ultimately reaching the Sahasrara Chakra, which is at the crown of the head. The accessories worn on the plait, including the kunjam (tied to the bottom of the plait) are differently shaped to represent the 7 major Chakras in the human body.


Summary of the symbolic properties of the accessories


Ottiyanam - Manipura Chakra
Muthumaalai Pathakkam - Anahata Chakra
Attigai - Vishuddhi Chakra
Nettrichutti - Ajna Chakra
Suriyan, Chandran - Idanaadi, Pingalanaadi
Raakodi - Sahasrara Chakra
Jadaipinnal & Kunjam - Kundalini Shakthi


Our early ancestors have mentioned years ago, that learning Bharathanatyam is beneficial to both the mind and body. Many scholars and scientists have noted the various benefits conferred by Bharathanatyam by applying their yogic and scientific knowledge, which are awed at by many till today. Bharathanatyam is a highly reputed art form. The accessories used by a Bharathanatyam dancer do not just enhance his/her beauty, but they help in protecting the spirit and the spiritual energy of the human body. Through this study on the benefits of Bharathanatyam and of the accessories used by a Bharathanatyam dancer, I can't emphasise enough how confident and proud I am to learn this art as it weaves a direct path towards the attainment of enlightenment. 



     











    Mohanapriyan Thavarajah

English Translation : Kalpana Sivan

கூச்சிபுடி நடனத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஆங்கிகா அபிநயம்

 கூச்சிபுடி நடனத்தில் செல்வாக்குச் செலுத்தும் 
ஆங்கிகா அபிநயம்.  
மோகனப்ரியன் தவராஜா

நடனம் என்னும் அழகிய உளமார்த்த வல்ல உன்னத கலை மொழியினும் அப்பாற்பட்டு கலையார்வம் கொண்ட மனிதனையும் உலகினையும் இயக்கவல்லது. இந்தியாவில் வெவேறு மாநிலங்களில் தோன்றிய  நடனமாக இருந்தாலும்  அவை அனைத்தும் ஒன்று கூடி பறை சாற்றுவது அன்பினாலான அதன் அழகினையும் இறைவனுடன் கொள்ளும் ஆன்மீக பக்தியினையுமே ஆகும். 
இதனால் தான் நடனக்கலை மிகவும் ஒரு நுணுக்கம் வாய்ந்த தெய்வீக கலையாக எல்லோராலும் மதிக்கப்படுகின்றது. ஒரு மனிதன் உளமார தனது தூய அன்பினால் கொண்டு துதிக்கும் வழிபாடினையே இறைவன் ஏற்று அனுக்ரகம் வழங்குவது போல், நடனக்கலையும் உளமார உணர்ந்து உடலால் நெகிழ்ந்து அதனை அரங்ககேற்றும் பொழுது அந்நடனதினால் உண்டாகும் உணர்வுபூர்வமான உண்மையான ரசமானது கலை பிரியர்களின் மனதினை களிப்பூட்டுகின்றது. அக்காலகட்டத்தில் கோயில்களில் ஆடப்பட்டு வளர்த்துவந்த கலையின் ஆதாரமாக இன்றும் விளங்குவது. கோயில்களில் காலம் காலமாய் திகழ்ந்த ஆதாரம் எடுத்துக்கூறும் ஆடற் மாந்தர்களின் கரண சிற்பங்களே. இந் நாட்டிய காரண சிற்பங்களை ஆராய்ந்தோமானால் அவை நூற்றியெட்டாக வகைப்படுகின்றது. இவற்றை வகைப்படுத்தியவரும் இரண்டாம் நூற்றாண்டில் நட்டியசாஸ்திரத்தை வகுத்த பரதமுனியே. ஆடற்கலையின் அரசன் நடராஜருடைய தாண்டவங்களின் தோற்றங்களில் இருந்து வகைப்படுத்தியிருக்கலாம் என்று யூகிக்கமுடிகின்றது. இவையே இன்று நாம் கற்கும் அங்ககார அசைவுகள் பற்றி கல்வி கூறும் ஆங்கிகா அபிநயம்.


.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் எண்பத்தியோரு கரனசிற்பங்களும், கும்பகோணம் சாரன்காபாணி கோவிலினில் நூற்றியாறு கரனசிற்பங்களும் இங்கே மூல மூர்த்தி கிரிஷ்ணனாதனால் இங்கே அமைக்கப்பட்டிருக்கும் கரணச்சிற்பண்கள் கிருஷ்ணர் புரிவது போல் அமைக்கப்பட்டுள்ளன மேலும்  தில்லை நடராஜர் கோவினில் நூற்றியெட்டு கரணசிற்பங்களும் இலங்கையில் நல்லூர் கந்தஸ்வாமி கோவிலினில் சில கரணசிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளதனை கண்கூடாக காணமுடிகின்றது. இக்கரணங்கள் நாட்டியத்தின்  வடிவமைப்பினையும் அதன் அதன் அழகினையும் எடுத்துக்காட்ட வல்லதாக காணப்படுகின்றது. இக்கரனங்களின் தாக்க முனைவுகள் கூச்சிப்புடி நடத்தில் காணமுடிகின்றது. இவற்றை விபரிக்க முன்னர் இன்னடநடனத்தின் தோற்றத்தினை அறிவது பொருத்தமாக இருக்கும்

இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபுரம் எனும் மாவட்டத்தில் குசேலபுரம் எனும் கிராமம் இருந்தது. அங்கே சில ஏழ்மையான பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு நிறுத்த பரம்பரையை சார்ந்தவர்களாக காணப்பட்டனர் . அவர்களுடைய கஷ்டத்தினை போக்க தமது வாழ்வாதாரமாக ஒரு நடனத்தினை உருவாக்கி அதனை அனைவர் முன்னிலையிலும் அரங்கேற்றி வந்தனர். அதுவே பிற்காலத்தில்  கூச்சுப்புடி என்று  அழைக்கப்பட்டது. பின்னர் குசேலபுரத்தின் பெயர் மருவி கூச்சுப்புடி கிராமம் என அழைக்கப்பட்டது.

 



இந்நடனம் சுமார் எழுநூறு தொடக்கம் எண்ணூறு ஆண்டுகளாக பழக்கத்திலிருந்து வந்ததாக கூறப்படுகின்றது. காலப்போக்கில் இந்நடனம் பக்திரசம் கொண்டனவாக இயற்றப்பட்டு இறைவன் பால் கொண்ட பெருமைகளையும், லீலைகளையும் குறித்து ஆடப்பட்டது. ஆண்களாலே பெரும்பாலும் இந்நடனம் ஆடப்பட்டுவந்தது, பெண்கள் கதாபாத்திரம் தேவைப்படுமிடத்து ஆண்கள் பெண்கள் வேடம் பூண்டு மிகவும் அழகு பொருந்திய ஆடை,ஆபரணங்களையும் அணிந்து ஆடுவர். பதினேழாம்நூற்றாண்டினைச்சேர்ந்த “ சித்தேந்திர யோகி “ பாமக்கலாபம் என்ற உருப்படியை உருவாக்கினார் இந்த உருப்படியில் கிருஷ்ணருக்கும் பாமாவிற்கும் இடையில் நிகழ்ந்த சண்டை, தாபம் போன்ற நிகழ்வுகளை குறித்து இருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் “கொல்லக்கலாபம்” எனும் உருப்படியினை அரங்கேற்றியுள்ளனர். இன்நடனத்தில் பிராமணர்களுக்கும் பால் விற்க வந்த பெண்களுக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கங்களை கருவாக கொண்டு ஆடியிருக்கின்றனர்.


நாராயண தீர்த்தருடைய கிருஷ்ணா லீலா தரங்கினி என்ற நூல் வெளியான பின்பே அடவு, நடனமுறை தாளம், சொற்கட்டு என்பன உண்டானதாக கூறப்படுகிறது. கூச்சிப்புடி நடனத்தில் இடம்பெறும் உருப்படிகளாக  பிரம்மாஞ்சலி, தரங்கம், சிவகவுத்துவம், ஞான வர்ணம், பத வாரணம், ஜதிஸ்வரம், காமஷூக சப்தம், கிருஷ்ண சப்தம், மேளம், தசாவதார நிருத்தம். ஷோகம், கீர்த்தனை, அர்த்தபதிகம், அத்யாத்ம இராமாயணம், மண்டூக சப்தம், தில்லானா போன்றவற்றை குறிப்பிடலாம். பரதநாட்டியத்தில் வர்ணம் எனும் உருப்படிஎவ்வாறு பரதநாட்டிய நிகழ்ச்சியின் ஜீவநாடியாக திகழ்கின்றதோ அதே போலத்தான் கூச்சிபுடியிலும் தரங்கம் என்னும் உருப்படி சிறந்தவோடு இடத்தை கொண்டுள்ளது. தலையில் நீர் நிரம்பிய செம்புடன் கால்களை தட்டினில் உன்றி தாளம் தவறாமல் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆடும் இவ்வுருப்படி கூச்சுப்புடி நடந்க்கலைஞரின் அதீத திறமையை வெளிக்கொண்டரும் வகையினில் காணப்படுகின்றது  
கூச்சிப்புடிநாட்டிய மணியின் ஸ்தானக நிலை தொடக்கம் அங்க அசைவுகள் க்ரீவா பேதங்கள் கடி பேதங்கள் கொண்டு அமைக்கப்பட்ட அடைவுகளில்  கரணங்களின் சாயல்களை காணமுடிகின்றது. மிகவும் துரிதமான கதியில் ஆடப்படும் அடைவுகள் கரணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க  முடிகின்றது. பொதுவாக பரதநாட்டியத்தின் அடைவுகளை பரதநாட்டிய கலைஞர் உள்வாங்கும் பொழுது அவர்களுடைய உடலில் அமைப்பு கணித சார்பிட்கு உள்பட்டு  சீரான கோடுகளும்  வளைவுகளும் வெளிப்படுவதனை  காணமுடிகின்றது. அதனுடன் கூச்சிபுடி நடன அடைவுகளை ஒப்பிடும் பொழுது அவை உடல் அசைவையும் அழகு கரணங்களையும் எடுத்துகூறுவனவாய் அமைந்துள்ளது.

இன்றைய நாட்களில் மூத்த குருக்களை பின்பற்றி வந்த மூத்த கலைஞர்கள் கூச்சிப்புடியில் இடம் பெறும் அடைவுகளுக்கு அவற்றில் அமைந்த கரணத்தின் சாயலிட்கேட்ப காரணங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர் உதாரணமாக  எடகக்ரீடித, ஸ்திதாவர்த்த, அஞ்சிதகண்டிதம் , ஸ்வஸ்திகாஞ்சிதகண்டிதம், கண்டித்த ப்ரசாரித, கர்த்தரிஸ்வஸ்திகம், பார்ஷ்வகட்டித, உபயபாஸ்வகட்டித, அக்ரதலசஞ்சாரம்,தொதுவங்க, சன்னிதாச்சாரி, வாமபாதவர்த்திதம்,உத்கட்டித, தக்ஷினபாதவர்த்திதம், கர்தரிகாதா, நூபுரபாதிக, உபயபாஸ்வகாதா, சமபாதகண்டிதப்ரசாரிதம் போன்ற அங்ககார அசைவுகளை கொண்டிருக்கின்றது. பாஸ்வ கட்டித என்பது இடையை குறிக்கின்றது இடையின் அசைவு மிகவும் அதிகமாக இந் நடனத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கால் விரல்களால் செய்யப்படும் அசைவுகள் ஆக்ராதலசஞ்சாரம் என அழைக்கப்படுகின்றது.

உடல் அசைவு நாட்டியத்தின் மொழி பகிரும் ஒரு ஊடகமாக திகழ்கின்றது. ஆத்மாவோடு ஒன்றித்த இக்கலை பிரபஞ்சம் எங்கும் உன்னதமாக போற்றப்படும் சிறப்பின் உட்பொருள் ரசிகன் கண்ணால் கண்ணுற்று மெய்சிலிர்க்க உளமாற உருகுவதனாலே…





                                                   
                                                     மோகனப்ரியன் தவராஜா 

                                                click here to visit my official page