கூச்சிபுடி நடனத்தில் செல்வாக்குச் செலுத்தும்
ஆங்கிகா அபிநயம்.
மோகனப்ரியன் தவராஜா
இதனால் தான் நடனக்கலை மிகவும் ஒரு நுணுக்கம் வாய்ந்த தெய்வீக கலையாக எல்லோராலும் மதிக்கப்படுகின்றது. ஒரு மனிதன் உளமார தனது தூய அன்பினால் கொண்டு துதிக்கும் வழிபாடினையே இறைவன் ஏற்று அனுக்ரகம் வழங்குவது போல், நடனக்கலையும் உளமார உணர்ந்து உடலால் நெகிழ்ந்து அதனை அரங்ககேற்றும் பொழுது அந்நடனதினால் உண்டாகும் உணர்வுபூர்வமான உண்மையான ரசமானது கலை பிரியர்களின் மனதினை களிப்பூட்டுகின்றது. அக்காலகட்டத்தில் கோயில்களில் ஆடப்பட்டு வளர்த்துவந்த கலையின் ஆதாரமாக இன்றும் விளங்குவது. கோயில்களில் காலம் காலமாய் திகழ்ந்த ஆதாரம் எடுத்துக்கூறும் ஆடற் மாந்தர்களின் கரண சிற்பங்களே. இந் நாட்டிய காரண சிற்பங்களை ஆராய்ந்தோமானால் அவை நூற்றியெட்டாக வகைப்படுகின்றது. இவற்றை வகைப்படுத்தியவரும் இரண்டாம் நூற்றாண்டில் நட்டியசாஸ்திரத்தை வகுத்த பரதமுனியே. ஆடற்கலையின் அரசன் நடராஜருடைய தாண்டவங்களின் தோற்றங்களில் இருந்து வகைப்படுத்தியிருக்கலாம் என்று யூகிக்கமுடிகின்றது. இவையே இன்று நாம் கற்கும் அங்ககார அசைவுகள் பற்றி கல்வி கூறும் ஆங்கிகா அபிநயம்.
.
தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் எண்பத்தியோரு கரனசிற்பங்களும், கும்பகோணம் சாரன்காபாணி கோவிலினில் நூற்றியாறு கரனசிற்பங்களும் இங்கே மூல மூர்த்தி கிரிஷ்ணனாதனால் இங்கே அமைக்கப்பட்டிருக்கும் கரணச்சிற்பண்கள் கிருஷ்ணர் புரிவது போல் அமைக்கப்பட்டுள்ளன மேலும் தில்லை நடராஜர் கோவினில் நூற்றியெட்டு கரணசிற்பங்களும் இலங்கையில் நல்லூர் கந்தஸ்வாமி கோவிலினில் சில கரணசிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளதனை கண்கூடாக காணமுடிகின்றது. இக்கரணங்கள் நாட்டியத்தின் வடிவமைப்பினையும் அதன் அதன் அழகினையும் எடுத்துக்காட்ட வல்லதாக காணப்படுகின்றது. இக்கரனங்களின் தாக்க முனைவுகள் கூச்சிப்புடி நடத்தில் காணமுடிகின்றது. இவற்றை விபரிக்க முன்னர் இன்னடநடனத்தின் தோற்றத்தினை அறிவது பொருத்தமாக இருக்கும்
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபுரம் எனும் மாவட்டத்தில் குசேலபுரம் எனும் கிராமம் இருந்தது. அங்கே சில ஏழ்மையான பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு நிறுத்த பரம்பரையை சார்ந்தவர்களாக காணப்பட்டனர் . அவர்களுடைய கஷ்டத்தினை போக்க தமது வாழ்வாதாரமாக ஒரு நடனத்தினை உருவாக்கி அதனை அனைவர் முன்னிலையிலும் அரங்கேற்றி வந்தனர். அதுவே பிற்காலத்தில் கூச்சுப்புடி என்று அழைக்கப்பட்டது. பின்னர் குசேலபுரத்தின் பெயர் மருவி கூச்சுப்புடி கிராமம் என அழைக்கப்பட்டது.
இந்நடனம் சுமார் எழுநூறு தொடக்கம் எண்ணூறு ஆண்டுகளாக பழக்கத்திலிருந்து வந்ததாக கூறப்படுகின்றது. காலப்போக்கில் இந்நடனம் பக்திரசம் கொண்டனவாக இயற்றப்பட்டு இறைவன் பால் கொண்ட பெருமைகளையும், லீலைகளையும் குறித்து ஆடப்பட்டது. ஆண்களாலே பெரும்பாலும் இந்நடனம் ஆடப்பட்டுவந்தது, பெண்கள் கதாபாத்திரம் தேவைப்படுமிடத்து ஆண்கள் பெண்கள் வேடம் பூண்டு மிகவும் அழகு பொருந்திய ஆடை,ஆபரணங்களையும் அணிந்து ஆடுவர். பதினேழாம்நூற்றாண்டினைச்சேர்ந்த “ சித்தேந்திர யோகி “ பாமக்கலாபம் என்ற உருப்படியை உருவாக்கினார் இந்த உருப்படியில் கிருஷ்ணருக்கும் பாமாவிற்கும் இடையில் நிகழ்ந்த சண்டை, தாபம் போன்ற நிகழ்வுகளை குறித்து இருக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் “கொல்லக்கலாபம்” எனும் உருப்படியினை அரங்கேற்றியுள்ளனர். இன்நடனத்தில் பிராமணர்களுக்கும் பால் விற்க வந்த பெண்களுக்குமிடையில் ஏற்பட்ட பிணக்கங்களை கருவாக கொண்டு ஆடியிருக்கின்றனர்.
நாராயண தீர்த்தருடைய கிருஷ்ணா லீலா தரங்கினி என்ற நூல் வெளியான பின்பே அடவு, நடனமுறை தாளம், சொற்கட்டு என்பன உண்டானதாக கூறப்படுகிறது. கூச்சிப்புடி நடனத்தில் இடம்பெறும் உருப்படிகளாக பிரம்மாஞ்சலி, தரங்கம், சிவகவுத்துவம், ஞான வர்ணம், பத வாரணம், ஜதிஸ்வரம், காமஷூக சப்தம், கிருஷ்ண சப்தம், மேளம், தசாவதார நிருத்தம். ஷோகம், கீர்த்தனை, அர்த்தபதிகம், அத்யாத்ம இராமாயணம், மண்டூக சப்தம், தில்லானா போன்றவற்றை குறிப்பிடலாம். பரதநாட்டியத்தில் வர்ணம் எனும் உருப்படிஎவ்வாறு பரதநாட்டிய நிகழ்ச்சியின் ஜீவநாடியாக திகழ்கின்றதோ அதே போலத்தான் கூச்சிபுடியிலும் தரங்கம் என்னும் உருப்படி சிறந்தவோடு இடத்தை கொண்டுள்ளது. தலையில் நீர் நிரம்பிய செம்புடன் கால்களை தட்டினில் உன்றி தாளம் தவறாமல் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆடும் இவ்வுருப்படி கூச்சுப்புடி நடந்க்கலைஞரின் அதீத திறமையை வெளிக்கொண்டரும் வகையினில் காணப்படுகின்றது
கூச்சிப்புடிநாட்டிய மணியின் ஸ்தானக நிலை தொடக்கம் அங்க அசைவுகள் க்ரீவா பேதங்கள் கடி பேதங்கள் கொண்டு அமைக்கப்பட்ட அடைவுகளில் கரணங்களின் சாயல்களை காணமுடிகின்றது. மிகவும் துரிதமான கதியில் ஆடப்படும் அடைவுகள் கரணங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என யூகிக்க முடிகின்றது. பொதுவாக பரதநாட்டியத்தின் அடைவுகளை பரதநாட்டிய கலைஞர் உள்வாங்கும் பொழுது அவர்களுடைய உடலில் அமைப்பு கணித சார்பிட்கு உள்பட்டு சீரான கோடுகளும் வளைவுகளும் வெளிப்படுவதனை காணமுடிகின்றது. அதனுடன் கூச்சிபுடி நடன அடைவுகளை ஒப்பிடும் பொழுது அவை உடல் அசைவையும் அழகு கரணங்களையும் எடுத்துகூறுவனவாய் அமைந்துள்ளது.
இன்றைய நாட்களில் மூத்த குருக்களை பின்பற்றி வந்த மூத்த கலைஞர்கள் கூச்சிப்புடியில் இடம் பெறும் அடைவுகளுக்கு அவற்றில் அமைந்த கரணத்தின் சாயலிட்கேட்ப காரணங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர் உதாரணமாக எடகக்ரீடித, ஸ்திதாவர்த்த, அஞ்சிதகண்டிதம் , ஸ்வஸ்திகாஞ்சிதகண்டிதம், கண்டித்த ப்ரசாரித, கர்த்தரிஸ்வஸ்திகம், பார்ஷ்வகட்டித, உபயபாஸ்வகட்டித, அக்ரதலசஞ்சாரம்,தொதுவங்க, சன்னிதாச்சாரி, வாமபாதவர்த்திதம்,உத்கட்டித, தக்ஷினபாதவர்த்திதம், கர்தரிகாதா, நூபுரபாதிக, உபயபாஸ்வகாதா, சமபாதகண்டிதப்ரசாரிதம் போன்ற அங்ககார அசைவுகளை கொண்டிருக்கின்றது. பாஸ்வ கட்டித என்பது இடையை குறிக்கின்றது இடையின் அசைவு மிகவும் அதிகமாக இந் நடனத்தில் பயன்படுத்தப்படுகின்றன. கால் விரல்களால் செய்யப்படும் அசைவுகள் ஆக்ராதலசஞ்சாரம் என அழைக்கப்படுகின்றது.
உடல் அசைவு நாட்டியத்தின் மொழி பகிரும் ஒரு ஊடகமாக திகழ்கின்றது. ஆத்மாவோடு ஒன்றித்த இக்கலை பிரபஞ்சம் எங்கும் உன்னதமாக போற்றப்படும் சிறப்பின் உட்பொருள் ரசிகன் கண்ணால் கண்ணுற்று மெய்சிலிர்க்க உளமாற உருகுவதனாலே…
மோகனப்ரியன் தவராஜா
No comments:
Post a Comment