Profile

Monday, 26 August 2013

ஸ்ருங்காரம், வாத்சல்யம், பக்தி ஓர் இழையோடும் உள்ளுணர்வு


 ஸ்ருங்காரம், வாத்சல்யம், பக்தி ஓர் இழையோடும் உள்ளுணர்வு.

                                                                                                               மோகனப்ரியன் தவராஜா 


           


அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அளிக்கவல்லது என்று வேதகாலத்திலும் பிற்காலத்திலும் பேரரசர்களாலும் உன்னதமாக போற்றப்பட்டது நமது நடனக்கலை காலப்போக்கில் அதே கலை தன் சிறப்பிடத்தை இழந்து, கடந்த நூற்றாண்டுகளில் கௌரவமான குடும்ப பெண்கள் பார்க்கவும் தகுதியற்றது என்ற நிலையையும் அடைந்தது. இன்று இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலச்சக்கரத்தின் சுழற்சியில் இக்கலை சமுதாயத்தில் ஒரு கௌரவ சின்னமாகவே ஆகிவிட்டது. இக்கலை செய்முறை, சமயசார்பு,சமூகதொடர்பு, மனோதத்துவ பிரதிபலிப்பு போன்ற பல கோணங்களிலிருந்தும் ஆராயலாம். தற்பொழுது இங்கே ஆய்வுக்காக சமயச்சார்புடன் மனோதத்த்துவமாக பிரதிபலிக்கும் உணர்வுகள் தொடர்புடைய நடனத்தின் மொழியாய் விளங்கும் பாவ மெய்ப்பாட்டு உணர்வுகள் கலையின் முக்கிய இடத்தினை வகிக்கின்றது

பொதுவாக சமயத்தின் நோக்கம் இறையுனர்வினை ஊட்டி மனித வாழ்வை நல்வழிப்படுத்தி நட்கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்வின் இறுதி நிலையான மோட்சம் அல்லது முத்தி நிலையை அடைவதாகும். உணர்வுடன் செய்யும் சடங்குகளே சடப்பொருள்களுக்கும் இறைஉணர்வினை ஊட்டுவதாக அமைகின்றது. பாவனோநிஷத் பாவனையும் அதன் பயன்பாடு மற்றும் அதன் பயனாக விளையும் உணர்வின்  உச்ச நிலையைப்பற்றிய விளக்கத்தை படம் பிடித்து காட்டுகின்றது.விளைவுகளின் அடிப்படையில் ஆராயும் போது செயல்களை விட எண்ணங்களும் உணர்வுகளுமே அதிக வீரியம் உடையனவாக தெரிகின்றது. கலை எனும் வகையில் மேல்நாட்டு கலைகள் யாவும் மனித உடலில் புறத்தோற்றம் மற்றும் செயல்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. மாறாக இந்திய பாரம்பரியத்தில் முகிழ்த்த கலை,ஞானம், அறிவு,தேடல்,வாழ்க்கை,மொழி,பயன்பாடு ஆகிய இவையாவும் உச்சகட்ட சங்கமித்து ஒன்றாய் விளங்கும் தன்மையுடையது. “ அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே” எனும் முது மொழி பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இறையாற்றலானது சதைபிண்டமாக உருவெடுத்து மானுட வடிவில் மனித உடலிலும் நிறைந்துள்ளது என்பது ஞானிகளின் மெய்மொழியாகும் இதனையே “ தேஹோ தேவாலயஹா” என வேதமுமும் “ உடம்பை வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே” என திருமுலரும் கூறியுள்ளார்.

மனித உடல்ந அமைப்பிலேயே ஆலய கட்டுமானங்களும் அமையப்பெற்று  கருவறையில் விளங்கும் இறைவடிவம் உயிராகவும் கருதப்படுகிறது. இறைவனை உயிர்களை ஆளும் ஆண்டவனாகவும், தம்மை மணந்த மணாளனாகவும், உள்ளம் கவர்ந்த காதலனாகவும், தாய் தந்தையாகவும் உடன் பிறந்த சகோதரனாகவும் நண்பனாகவும் தனது எஜமானாகவும், தன்னை அடிமையாகவும், தான் வணங்கும் பரம்பொருளாகவும் வழிபடும் அன்பு வழி நிற்கும் வழியை பக்தி மார்க்கம் எனவும் மேற்கண்ட வழிமுறைகளை நவபக்தி எனவும் அழைப்பர்.

மனிதர்களின் மனநிலை பக்குவம் சூழ்நிலை வாய்ப்புக்கள் இவைகளை பொறுத்து மேற்கண்ட வழகளில் ஏதேனும் ஒன்றை பின்பற்றி நின்றாலே இறை அருளுக்கு பாத்திரமாவதுடன் இறைவனோடு ஒன்றிக்கும் நிலையையும் அடையலாம். ஆனால் பக்தி மார்க்கம் மனிதன் முதல் தாழ் நிலையில் உள்ள அஹிறினை உயிர்கள் ஈறாக உறவு நிலை நிலை மேம்பட்ட தன்மை ஒன்றையே முக்கிய தகுதியாக கொண்டு இறைவனுடன் சேர்ந்து எளிய இனிய வழியாகையால் பக்தியானது மதுர மார்க்கம் என்றும் அழைக்கப்படுகின்றது

பக்தியோடு மிகவும் நெருங்கிய தெய்வீக உறவு கொண்டது தான் நாட்டியக்கலை கோயில்களில் பக்தியோடு பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்த இந்த நாட்டிய கலை இறைவனை அணுகும் ஒரு ஊடக உறவுமுறையாகவே திகழ்ந்திருக்கின்றது திகழ்ந்தும் வருகின்றது என் கூறலாம். அதிகாலையில் இறைவன் பள்ளி எழுந்ததில் இருந்து அந்நாளிற்குரிய அனைத்து வேளை விஷேட பிரார்த்தனை நிகழ்வுகளிட்கும் இறைவனை போற்றி துதிப்பதிலிருநது் நிறைவாக இறைவனை துயில் கொள்ளச்செய்யும் வரை அமைந்துள்ள சடங்குகளில் இந்நாட்ய கலை இன்றியமையாது திகழ்ந்திருக்கின்றது. ஆகவே தெய்வீகமான நாட்டியக்கலையின் உள்நோக்கினை உற்று நோக்கும் போது மனதால் உணர்ந்து முகத்தால் வெளிப்படுத்தும் பாவத்தினால் உருக்கொடுத்து, உடலசைவுகளால் உயிரூட்டி வெளிக்கொணரும் இக்கலையானது இறையருளை வேண்டி இறையுடன் ஒன்றிப்பதற்கே  எனலாம்.இதனாலேயே தான் என் முனோர்கள் கருத்தின் படி ஆன்மாக்கள் உறையும் இடம் கோவில் என்றும் இதன் வழியே கோவில்களில் தெய்வீக  கலையான  நாட்டியக்கலை வளர்க்கப்பட்டு வந்தன என்றும்  கூறும் பொழுது இறைவன், பக்தி,நடனம் போன்றவற்றிக்கிடையிலான ஓர் இழையோடும் உள்ளுணர்வினை எம்மால் உணரமுடிகின்றது. உறவுகள் பலவகைப்படலாம் இருப்பினும் அவை ஒவ்வொன்றும் ஒரு தொடர்பினையே சார்ந்து இருக்கும் அவ்வாறே இறைவன் ஒருவராக இருந்தாலும் அப்பரம்பொருளை அதாவது பரமாத்மாவினை அணுகும் ஜீவத்மாக்களின் உறவு முறைகளும் வகைப்பட வாய்ப்புகள் உண்டு.

இவ்வாறான உறவு முறைகள் நடனத்தில் இறையருள் இணைய நினைக்கும் போது ஆங்காங்கே பல ரசங்களும் பாவங்களும் உண்டாகின்றன உதாரணமாக அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு தாயிருக்க அவ்விடத்தில் அருள் கொண்ட தாயாக உமையம்மைசிவனுடன் இடப வாகனத்தில்  தோன்றி பாலமுது ஊட்டினாள். ஆங்கே தோன்றியது வாத்சல்ய பாவமான தாய் மகனுக்கு இடையிலான உறவு. ஆனந்த கூத்தனுடைய திருமேனி அமைப்பில் அவர் முகத்தோற்றமோ  தனி சிறப்புடையது புருவங்கள் குனியும் போதும் கொவ்வை கனி போன்ற அந்த செவ்வாய் குமின் சிரிப்பில் ததும்பும் போது “ குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயிற் குமிண் சிரிப்பும்” என்ற தேவாரத்தினை தனது அனுபவ வாக்குகளால் அப்பர் பாடும் பொது அங்கே கூத்தனுடைய முகத்தினின் சிருங்காரம் தோன்றுவது எம் இதயத்தில் பிரதிபலிப்பதாய் உணரமுடிகின்றது அதுமட்டுமல்லாமல்  இறைவன் மீது காதல் கொண்டு தன்னை நாயகியாகி எண்ணி திருவாசக வரிகளால்  துதிக்கும் மாணிக்கவாசகர் தனது அனுபவங்களில் ஸ்ருங்காரத்தினை பகிர்கின்றார். “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்” என்ற வரிக்கிணங்க மாணிக்கவாசகரின் ஆழ்ந்த சுவையான அர்த்தங்களை கொண்ட பாடல்களை கேட்ட இறைவனும் செவிமடுத்து அருள் மழி வாரியிருக்கின்றார் அவரின் ஸ்ருங்கார பக்தி முறையினால்

பக்தி என்பது அன்பின் வடிவம் அது செயல் வடிவமாக இல்லாது மனித அன்பின் வெளிப்பாடாக பூஜை வடிவில் விளங்குகின்றது அன்பு இல்லாத பூஜையை இறைவன் ஏற்பதில்லை மாறாக அன்பைகொண்ட மலர்களை கொண்டு பூஜிப்பதனையே சாலச்சிறந்தது என்று அப்பரும் அருணகிரிநாதரும் மற்றும் பல ஞானிகளும் கூறுகின்றார்கள். தன்னை ஒரு தோழனாக பாவித்து ஆழ்ந்த உரிமையுள்ள சகமார்க்கம் வழியாக தனது பக்தியினை இறைவனை தன் தோழனாக கருதி அவரை “பித்த” என்றும் இறைவன் விரும்பிக்கேட்ட வார்த்தைக்கிணங்க தேவாரப்பாடல் பாடி தனது ஆழ்ந்த பக்தியினை வெளிக்காட்டி இருக்கின்றார் சுந்தரர்

ஸ்ருங்கார ரசம் ( மதுரபக்தி   பாவம் - இறைவனை காதலனாக )


ரசங்களில் முதலாவதாக விளங்குவது சிருங்காரம். இது காதல் அன்பு என்பவற்றை அடிப்படையாக கொண்ட இந்த ரசத்தின் ஸ்தாயி பாவம் ரதியாகும் பீபத்ஸ ரசத்தினை எதிர் ரசமாகவும், கரு நீலநிறத்தை அதன் நிறமாகவும் மகாவிஷ்ணுவை தேவதையாகவும் கொண்ட சிருங்காரம் காமத்தை புருஷார்த்தமாகக்கொண்டது இதன் இலட்சணம் என்னவெனில் ஒருவர் தான் விரும்பிய ஒன்றை அடைந்து மகிழ்தல் ஆகும் .இறைபக்தி மார்க்கத்தில் மதுர பக்தி எனும் பக்தி சிறந்த பக்தியாக கருதப்படுகின்றது ஜீவாத்மா தன்னை ஒரு காதலியாகவும் பரமாத்மாவை அல்லது இறைவனை காதலனாகவும் வரித்து பரமாத்மாவுடன் இணைய அருள் வேண்டி நிற்கும் வழியே “ மதுர பக்தி “ எனப்படும் இதில் மனித உணர்வோடும், அறிவோடும் தான் இருக்கின்ற நிலையிலேயே இருந்து கொண்டும் இறைவனை வழிபட முடியும் என்ற வழி கிடைப்பதால் இது சிறந்த பக்தி என் போற்றப்படுகின்றது  இந்த மாதுற பக்தி பாவம்  எல்லா பாவத்தையும் விட மிக உணர்வு பூர்வமானது இதனை தெய்வீகத்தின் உயர்ந்த நிலையாக கருதப்படுகிறது. மதுர பக்தியில் “ இறைவன் ஒருவனே புருஷோத்தமன் ஏனைய ஆன்மாக்கள் யாவும் பெண்களே” என் விபரிக்கும் மீரா  வாழ்க்கை சரித்திரமும் அவர் பஜன்களும் ஓர் உதாரணமே. மேலும்  ராத கிருஷ்ணா உறவில் சைத்தன்யா, ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும், மாணிக்கவாசகர்
பாடல்களிலும் திறம்பட எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

வாத்சலய பாவம் ( தாய் பாசம் )


ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையில் தோன்றும் இயற்கையான பாசத்தினையே பரதநாட்யத்தில் வாத்சல்ய பாவம் என்கின்றோம். இந்த பாவமானது கடவுளுடைய இனிமைத்தன்மையையும், மென்மையான அன்பையும் தன்  குணங்களாக கொண்டுள்ளது. மற்ற குணங்களை விட ஓர் நெருங்கிய உறவு மட்டுமல்லாமல் ஒரு தாய் தன்னுடைய சிறு குழந்தையினிடத்தே வைக்கும் இயற்கையான பாசம் இந்த வாத்சல்ய பாவத்திற்கு ஒரு நிலையை கொடுக்கின்றது. புராணங்களில் இந்த பாவம் பொதுவாக யசோதைக்குரியது கிருஷ்ணனுடைய செவிலி தாயாக இருந்தும் கிருஷ்ணனை தனது சொந்த மகனைப்போல் நேசித்தாள். அவருடைய தெய்வீக சக்தியை பல முறை அறிந்திருந்தாலும் அவரை தன்னுடைய மகனாக பாவிப்பதனை அவளால் தவிர்க்கமுடியவில்லை. உலகம் போற்றும் தெய்வக்குழந்தை கிருஷ்ணனாக இருந்தாலும் தந்து வாத்சலய பாவத்தின் வாயிலாக அன்பினை வெளிப்படுத்துகின்றாள் யசோதா. மேலும் வாத்சல்ய பாவத்தினை புனித விஷ்ணு சித்தர் மற்றும் பெரியாழ்வாரை விட வேறு யாராலும் பொழிப்புரை கூற முடியாது.

பக்தி ( நவவித பக்தி பாவம்  )


மனிதனும் இறைவனும் இணைவதற்கு ஓர் பாலமாக இருப்பது பக்தி. இந்த பக்தியை
பலவிதமாக கூறுகின்றனர் பொதுவாக இறைவனை அடைவதற்க்கு கர்ம மார்க்கம் ஞான மார்க்கம் பக்தி மார்க்கம் என்ற மூன்று வழிகளை கூறுவார்.இதில் கர்ம மார்க்கம் என்பது வேதங்களில் கூறப்பட்டுள்ள மதச்சடங்குகளையோ, யாகங்களையோ அதனால் கிடைக்கும் பயனால் இறைவனே மெய்ப்பொருள் என்றுணர்ந்து இறைவனிடம் ஒன்ரரக்கலப்பது பக்தி மார்க்கம் என்பது இறைவனிடத்தில் ஆழ்ந்த அன்பு செலுத்துவதால் கடவுளை உணரும் ஆற்றல்.  இறைவனை வழிபாடு செய்வதற்கு ஒன்பது வகையான பக்திமுறைகளை நம் முன்னோர்கள் வரையறை செய்துள்ளனர்.

நவவித பக்தி

சிரவணம் -                இறைவனுடைய திருநாமதினையும், புகழையும்   காதால் கேட்டல்


கீர்த்தனம் -               இறைவனின் புகழை இசையுடன் பாடுதல்
ஸ்மரணம் -                இறைவனை தியானித்தல்
பாதசேவனம் -          இறைவன் திருவடிக்கு தொண்டு புரிதல்
அர்ச்சனம் -               இறைவனுக்கு அர்ச்சனை செய்தல்
வந்தனம் -                 இறைவனை வணங்குதல்
தாஸ்யம்  -                இறைவனுக்கு தன்னையே கொடுத்து ஆளாக்குதல்
சக்யம்  -                   இறைவனோடு மனம் ஒன்றுபடுதல்
ஆத்மநிவேதனம் -     நமது ஆத்மாவினை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்தல்   
 
கருவிற்குள் கருவாய் மறைந்திருக்கும் இறையினை உணர்வது பக்தியின் உச்சகட்ட வெற்றியே. அன்போடு அணுகும் எந்த விடயமும் தோல்வியை சந்திப்பதில்லை.  பலன்களையே ஈட்டிகொள்கின்றது. காந்த கல்லுடன் எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கின்றதோ, அதே போல் பதிவிரதையின் மனம் கணவனிடமும், பக்தனின் மனம் பரமாத்மாவினிடத்திலும் மற்றும் நதியானது எவ்வாறு மகா சமுத்திரத்தில் கலந்து விடுகிறதோ அது போலதான் கடவுளுடன் நமது மனமும் கலந்து விட வேண்டும். நமக்கு அனுக்ரஹம் செய்கின்ற பரமாத்மாவிடத்தில் தன்னை அறியாமல் போய்நிற்க வேண்டும். எதையுமே தன்னலமாக நினைக்காமல் ஈஸ்வரனதிநிடத்தில் போய் சேருவதனையே நினைத்து தன்னை அறியாமல் ஓடுகின்ற சித்தவிருத்தி இருக்கிறதே அதற்குத்தான் பக்தி என்று பெயர் சூட்டலாம். இறைவனுடன் கொண்டுள்ள பக்தி பலவாறாக காணப்பட்டாலும் அவ்வுறவுகளின் வழியிலும் அதனால் ஏற்படும் பாவங்களிலும் ஓர் உள்ளுணர்வாக திகழ்வது இறை அன்பே ஆகும்.

கடவுளை இங்கே காதலனாக கொள்வதும் மதுரபக்தியின் வழியாக அவரை அடைய நினைப்பது ஒரு பக்கமாக கொண்ட மாணிக்கவாசகர், ஆண்டாள், மீரா, போன்றோர்  இருக்க, கடவுள் பற்றற்றதாய் கடவுளிடம் தாய் பாசத்தினை கொண்டுள்ள பக்தன் தன தாய் பாசத்தினைக்கொண்டு இறையினை பற்றிப்பிடித்து பக்தியில் தவழ்ந்த சம்பந்தர் பெரியாழ்வார்,போன்ற ஞானிகள் ஒருபக்கம் இருக்க, பக்தி பெருகிய காலம் தென்னிந்தியா சக்தி பெட்ட்றதும்  தோன்றிய நாயன்மார்களும், ஆழ்வார்களும் தம்மை சுற்றியிருக்கும் சக்தியான இறைக்கு கட்டளை பிறப்பித்த ஒழி அலைகள் ஆதார் சக்கரங்கள் மூலம் வெளிப்பட்ட தமிழ் வேதங்களாக தென் பொருந்திய ஆரங்களாக ( தேவாரம்) இறைவனுக்கு ஓதப்பட்டன. இதில் பொதிந்துள்ள மறைச்சொற்கள் மறை ஒளியாக உருவெடுத்து பஞ்ச பூதங்களின் இயக்கத்துடன் கிரக நிலைகளிலும் செல்வாக்கு செலுத்திய மந்திரங்களுக்கு ஒப்பான சொற்களைக்கொண்ட தமிழிசை மூவர் பாடல்கள் மற்றும் ஆழ்வார், நாயன்மார்களின் பாடல்கள் பக்தியின் பால் கொண்ட உறவால் பல்வேறு கிளைகளாக( நவவித பக்தி) பிரிந்து இறை சாகரத்தில் இரண்டரக்கலந்திருக்கின்றன. இறை அன்பு என்ற ஒரு விடயம் மாத்திரமே இங்கே பக்திமைப்பெரியோர்கள் கொண்ட பக்தியில் வெளிப்பட்ட. சிருங்காரம், வாத்சல்யம், பக்தி பாவங்களின் ஊர் இழையோடும் உள்ளுணர்வாக இங்கே முடிவாக விடை பகிர்கின்றது. இதனைத்தான் திருமுலர் “ அறியிளார் சொல்வர் கடவுளும் அன்பும் வேறு என்று ; யாரும் அறியவில்லை கடவுளும் அன்பும் ஒன்றென்று” எப்பொழுது கடவுளும் அன்பும் ஒன்றென்று உணர்கின்றனரோ அப்பொழுது தான் இறை பக்தியில் அமைதி கொள்வர் என்று தமது பாடல் வழியாக கூறியுள்ளார். மேலும் பல பக்தி சார் நூல்கள் கூறுவதாவது “ பக்தியின் குணமே கடவுளுக்குரிய அன்பு “ என்றும் பக்தியை அன்பு என்றும் பறை சாற்றி நிற்கின்றது.

ஆக இச்சையற்ற, மாயைக்கேல்லாம் அப்பாற்பட்ட இறை உணர்வில் ஏற்படும் நவபக்தி பாவமும், ஸ்ருங்கார பக்திபாவமும், வாத்சலய பாவமும் இறை அன்பிலாலான ஓர் இழையுடன் தொடுக்கப்பட்ட மெய்யான அர்ச்சனை மலர்களே.  மெய்யான அர்ச்சனை மலர்கள் கொண்டு பூஜிப்பதனையே இறைவன் விரும்புகிறார் இதுவும் ஞானிகளின் வாக்கே..


மோகனப்ரியன் தவராஜா








No comments:

Post a Comment